ரிச்சி பெனாட்டுக்கு சருமப் புற்றுநோய்

மிகப் பிரசித்தி பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான ரிச்சி பெனாட் சரும புற்றுநோய்க்காக தான் கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துவருவதாக அறிவித்துள்ளார்.

rechy-bernad

ஆஸ்திரேலியாவில் கோடைக்கால கிரிக்கெட் பருவத்தின் துவக்கத்தைக் குறிக்க சிட்னியில் நடந்த நிகழ்ச்சியில் பெனாட் இதனைத் தெரிவித்துள்ளார்.

84 வயதாகும் ரிச்சி பெனாட் ஆஸ்திரேலியாவுக்காக 63 டெஸ்ட் ஆட்டங்களை விளையாடி 248 விக்கெட்டுகளும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான ரன்களும் அவர் எடுத்திருந்தார்.

1964ல் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றார்.

கிரிக்கெட் விளையாடிவந்த காலத்திலேயே பிபிசியில் வர்ணனை செய்துவந்த பெனாட், விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் முழுநேர வர்ணனையாளராக வலம்வந்தார்.

பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வானொலியிலும் தொலைக்காட்சியிலும் கிரிக்கெட் வர்ணனையாளராக அவர் இருந்துவந்துள்ளார்.

சென்ற ஆண்டு அக்டோபரில் கார் விபத்து ஒன்று ஏற்பட கிரிக்கெட் வர்ணனை செய்வதை அவர் இடைநிறுத்தியிருந்தார்.

ஆனால் வரும் ஜனவரியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்த்து விளையாடும் நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் வர்ணனை செய்யப்போவதாக அவர் கூறுகிறார்.

Related Posts