வடிவேலுவின் காமெடி மார்க்கெட் சிறப்பாக சென்று கொண்டிருந்தபோது, அரசியல் புயலில் சிக்கியதால் சிலகாலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்தார்.
ஆனால் அதையடுத்து இனிமேல் நான் காமெடியன் அல்ல. முழுநேர ஹீரோ என்று கூறி தெனாலிராமன், எலி படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் மீண்டும் கத்திச்சண்டை, சிவலிங்கா படங்களில் காமெடியனாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் வடிவேலு.
மேலும், இந்த இரண்டு படங்களிலுமே ஹீரோக்களுடன் படம் முழுக்க பயணிக்கும் காமெடியனாக நடித்துள்ள வடிவேலு, அடுத்தபடியாக தன்னை காமெடியனாக நடிக்க பல டைரக்டர்கள் அணுகியபோதும், அவர்களுக்கு உடனடியாக கால்சீட் கொடுக்காமல் வெயிட்டிங்கில் வைத்துள்ளாராம்.
காரணம், நடித்துள்ள படங்கள் வெளியாகும்போது அதில் தனது காமெடிக்கு எந்த மாதிரியான ரிசல்ட் கிடைக்கிறது என்பதை ஆராயப்போகிறாராம். ஒருவேளை எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காதபட்சத்தில் காமெடி பாணியை மாற்றவே இந்த திட்டமாம்.