ராவணனை போன்ற அகங்காரம் கொண்ட டோணி பிச்சை எடுக்கபோகிறார்… யுவராஜ்சிங் தந்தை சாபம்

ராவணனை போல இந்திய அணி கேப்டன் டோணி அழியப்போகிறார் என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தந்தை யோக்ராஜ் சிங் சாபமிட்டு பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

yograj-singh-yuvraj-singh-f

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை. அவரை அணியில் சேர்க்காமல் இருக்க டோணி தூண்டுதல் காரணம் என்று யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால், யுவராஜ்சிங்கோ, தனது தந்தை உணர்ச்சிவசத்தில் பேசியதாகவும், டோணியின் தலைமையில் ஆட தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. தற்போது இந்தி சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்த யோக்ராஜ் சிங், மீண்டும் டோணியை சீண்டியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி: டோணி திறமையற்றவர். மீடியாக்கள்தான் அவரை கிரிக்கெட்டின் கடவுளாக மாற்றி வைத்துள்ளன. அதற்கான எந்த தகுதியும் டோணிக்கு கிடையாது. ஒன்றுமில்லாமல் இருந்த டோணியை தூக்கி வைத்த மீடியாக்களையும் டோணி தற்போது மதிப்பதில்லை, அவருக்காக கை தட்டிய இந்திய ரசிகர்களையும் அவர் மதிப்பதில்லை. எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்.

உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் மட்டும் ஒரு பத்திரிகையாளராக இருந்திருந்தால், சிரித்த டோணியை அதே இடத்தில் அடித்திருப்பேன். டோணி அகங்காரம் உள்ளவர். ராவணன் எப்படி அகங்காரத்தில் இருந்து வீழ்ந்தானோ, அதேபோல, டோணியும் ஒருநாள் கஷ்டப்படுவார்.

ராவணனைவிட பெரியவராக டோணி தன்னையே நினைத்துக் கொண்டுள்ளார். டோணியை பற்றி பிற வீரர்கள் சொல்லும்போதெல்லாம் நான் நம்பவில்லை. ஆனால், கொஞ்ச நாட்கள் கழித்துதான் நானே உணர்ந்து கொண்டேன்.

2011 உலக கோப்பை இறுதி போட்டியில், யுவராஜ்சிங் களமிறங்க வேண்டிய நேரத்தில், டோணி 4வதாக களமிறங்கி, தன்னை ஹீரோவாக காண்பித்தார். ஏன், இந்த உலக கோப்பை செமி பைனலில் டோணி 4வதாக இறங்கவில்லை. ஏன் 6வதாகவே களமிறங்கினார்.

ஒருநாள் இல்லை, ஒருநாள் டோணி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும், அன்று அவருக்காக யாருமே உதவிக்கு வரமாட்டார்கள். இவ்வாறு யோக்ராஜ்சிங் கூறியுள்ளார்.

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டவர் ஜார்ஜ் பெய்லி. ஆனால் காயத்தில் இருந்து குணமாகி, மைக்கேல் கிளார்க் அணிக்கு திரும்பியதும் பாதி தொடரில் கிளார்க் கேப்டனாக்கப்பட்டார். 11 பேர் அணியில் கூட பெய்லிக்கு இடம் கிடைக்கவில்லை. கோப்பையை கிளார்க் தூக்கி போஸ் கொடுத்தபோதிலும் கூட பெய்லி தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஆனால், இந்தியாவிலோ, இப்படி ஒரு நிலைமை நிலவுகிறது.

Related Posts