ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!

இலங்கை சிறையில் வாடும் தமிழ மீனவர்கள் 87 பேரை விடுவிக்க வலியுறுத்ததி ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்பவர்கள் 10,000 ஆயிரம் பேர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்த்திய, மாநில அரசுகள் மீனவர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடுபத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 39 விசைப்ப் படகுகளையும் திருப்பி தர வலியுறுத்தியுள்ளனர். இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தால் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் மீது 30 ஆண்டுகளாக இலங்கை கடற்படை தொடர் தாக்குதலில் நடத்தப்படுவதால் மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே மத்திய மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்கள் பிரச்சனை இன்றி பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழக மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Posts