ராமேஸ்வரம் அருகே மர்மப்படகு – இலங்கை கடத்தல்காரர்கள் ஊடுருவலா?

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரையில் ஒதுங்கிய மர்மப்படகில், இலங்கையைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ´கியூ´ பிரிவு பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தங்கச்சிமடம் கண்ணுபாடு கடற்கரையில் நேற்று 20 அடி நீளமுள்ள ஒரு மர்மப்படகு ஒதுங்கி நின்றது. அதில் வந்த கடத்தல்காரர்கள் 4 பேர் தங்க கட்டிகளுடன் ஊடுருவி இருக்கலாம், என கிடைத்த தகவலால், ´கியூ´ பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, மற்றும் தில்லைராஜன், நாராயணன், முருகேசன் ஆகிய பொலிஸ் அதிகாரிகள் அந்த படகை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

கடத்தல்காரர்கள் மீண்டும் இலங்கை திரும்ப வசதியாக, படகு இன்ஜினை கழற்றி, கடலோரத்தில் எங்கோ புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது. தலைமறைவான கடத்தல்காரர்களையும், படகு இன்ஜினையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

11099661_923065257745910_1896770318_o

11154057_923065271079242_1991952538_o

Related Posts