ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் பாவனைக்கு வருகிறது

தமிழ்நாட்டை சேர்ந்த ராமர்பிள்ளை என்பவருடைய கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ramar-pillai

1996ஆம் ஆண்டு ராமர்பிள்ளை மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து பரபரப்பை உண்டாக்கினார். ஆனால், பல்வேறு காரணங்களால் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சோதனைக்கு ஆளானார் ராமர்பிள்ளை.

சரியான கல்வி அறிவு இல்லாத அவரால், இந்த பெட்ரோலை கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அவர் கண்டுபிடித்துள்ள பெட்ரோலில் கலப்படம் இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த எதிர்ப்புகளுக்கு பின்னால் கார்ப்பரேட் கம்பெனிகளும், அரசியல்வாதிகளும் இருந்ததாக அப்போது கூறப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராமர்பிள்ளை, தன்னுடைய மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் நேரிடையாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாகவும், ஆகஸ்டு 14ஆம் தேதி முதல் ராணுவ பயன்பாட்டிற்காக அவரின் மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும் இதற்காக, மும்பையில் உள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது ராணுவ பயன்பாட்டிற்கு வந்துள்ள மூலிகை பெட்ரோல், பொது பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என்று நம்புவோம்.

Related Posts