ராணுவ பிடியிலிருந்த புதுக்குடியிருப்பு மக்களின் பகுதியளவு காணி விடுவிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணிகள் மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததற்கு அமைய, தற்போது முதல் கட்டமாக ஏழரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மக்கள் தங்கள் சொந்த காணிகளுக்குள் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேராட்டம், 14ஆம் திகதி முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts