ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பேரறிவாளன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைதண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சிறுநீர் தொற்று சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

paralevalaan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு சிறுநீர் தொற்று பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து சில வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கக் கோரி டிஐஜியிடம் அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த வாரம் மனு அளித்தார்.

வேலூர் சிறையில் சிகிச்சை பெற போதிய வசதி இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறுநீர் தொற்றால் அவதிப்பட்டு வருவதால், பேரறிவாளன் புழல் சிறைக்கு மாற்றப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

(பட உதவி: நக்கீரன்)

Related Posts