ராஜீவ்காந்தி படுகொலை வழங்கு இந்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்துவரும் ஏழுபேரின் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை இந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவினால் எதிர்வரும் 13ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கு தமிழக தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசினால் இவர்கள் ஏழுபேரையும் விடுதலை செய்வதற்கான அனுமதியினைக்கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

இதற்கு எதிராக மத்திய அரசாங்கம் தாக்கல் செய்திருந்த வழக்கே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது

Related Posts