ராஜித்த, அவரது மகன் உட்பட 14 பேருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ்

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அவரது மகன் எக்சத் சேனாரத்ன ஆகியோரை ஏப்ரல் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

rajitha sena

ராஜித்தவின் இளைய மகன் இளம் பெண் ஒருவரைக் கடத்தி தன்னுடன் வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ராஜித்த சேனாரத்னவின் இளைய மகனால், தனது மகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, குறித்த பெண்ணின் பெற்றோர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குற்றம் சுமத்தியிருந்தனர்.

கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ராஜித்த சேனாரத்னவின் மகனான எக்சத் சேனாரத்ன தனது 16 வயதான மகளை, வாகனம் ஒன்றில் வந்து கடத்திச் சென்றதாகவும், இது தொடர்பில் குறுந்துவத்தை பொலிஸ் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியோரிடம் முறைப்பாடு வழங்கியும் பலனில்லை எனவும் அவர்கள் கூறினர்.

அன்று முதல் இன்றுவரை தமது மகளை தன்னுடனேயே வைத்துள்ளதாகவும், இதுவரை அவரை பார்க்கவோ தொடர்பு கொள்ளவோ முடியவில்லை எனவும் பெண்ணின் தந்தை மேலும் குறிப்பிட்டார்.

மேலும் கடத்தப்பட்ட தன் மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி இவர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.

குறித்த மனுவை ஆராய்ந்ததில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அவரது மகன் உள்ளிட்ட 14 பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

எமது மகளைக் கடத்தியது ராஜித்தவின் மகனே! பெற்றோர் குற்றச்சாட்டு

Related Posts