ராகவா லாரன்சும் பாடகர் ஆனார்!! போட்டியும் அறிவிப்பு!

நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு நடன இயக்குனராகி, நடிகராகி, இயக்குனராகி, தயாரிப்பாளராகவும் ஆகியிருப்பவர் ராகவா லாரன்ஸ். சிறந்த சமூக சேவகர் என்பது இன்னொரு அடையாளம். தற்போது இன்னொரு புதிய அவதாரமாக பாடகர் ஆகியிருக்கிறார்.

larance-ragava

அவர் தற்போது நடித்து வரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் “லோக்கல் மாஸ்…” என்ற குத்துப்பாடலை சுஜித்ராவுடன் இணைந்து பாடியுள்ளார். இதே பாடலை திப்புவும், மாலதியும் பாடி உள்ளனர். நாளை இந்த இரண்டு பாடல்களும் வெளியிடப்படுகிறது. இதில் எது ரசிகர்களுக்கு அதிகமா பிடிக்கிறதோ அதுதான் படத்தில் இடம்பெறும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதோடு படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியிடப்படுகிறது. அதில் ராகவா லாரன்ஸ் ஒரு பன்ஞ் டயலாக் பேசியிருப்பார். அதனை அதே மாடுலேசனில் பேசி அந்த ஆடியோவை mottasivakettasivafilm@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பினால். சிறந்தமுறையில் பேசியவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் 10 வயதுக்கு குறைவான சிறுவர்களே கலந்து கொள்ள முடியும்.

Related Posts