ரஷ்ய வீரர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

உக்ரைன் – ரஷ்ய போர் ஓராண்டினை கடந்துள்ள நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 2 இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த போர் நடவடிக்கையில் போது ரஷ்ய வீரர்கள் அதிகப்படியாக மது அருந்தி போதையில் போரிட்டுள்ளமையே உயிரிழப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த போர் நடவடிக்கையின் போது ஆயுதங்களை மோசமாக கையாளுதல், அதிகப்படியான மதுப்பழக்கம் போன்றவைகளால் ரஷ்ய வீரர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்தி கொண்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர்த்து சாலை விபத்துக்கள், தாழ் வெப்பநிலை போன்றைவைகளும் ரஷ்ய வீரர்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்ததாகவும் கூறப்படுகின்றன.

Related Posts