ரஷ்ய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் உக்ரைன் ட்ரோன்கள்!!

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யப் படைகள் மீது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்தி உக்ரைன் இராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியதில் ரஷ்யாவுக்குப் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் அத்துமீறித் தாக்குதல் நடத்து வரும் ரஷ்யப் படைகள் மீது உக்ரைனின் 45வது தனி பீரங்கி படை, உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ட்ரோனை பயன்படுத்தி துல்லிய தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் ரஷ்யாவின் எரிபொருள் டிரக் மற்றும் சில ஆயுதம் தாங்கிய இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

Related Posts