ரஷ்ய நகரை சரமாரியாக தாக்கிய உக்ரைன் ஏவுகணைகள்!

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரைனில் உள்ள டோக்மாக்கின் முக்கியமான தளவாட மையத்தில் ராக்கெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக மாஸ்கோவால் நிறுவப்பட்ட பிராந்திய தலைவர் தெரிவித்துள்ளார்.

அவற்றில் மூன்று ராக்கெட்டுகள் வெடித்துள்ளதாகவும், நான்காவது ஒரு தொடருந்து நிலையம் அருகே விழுந்துள்ளது. ஆனால் வெடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் போது ஒருவர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டோக்மாக் என்பது ரஷ்ய தளவாடத் தலைமையகம் ஆகும். இது ஜபோரிஜியா நகருக்கு தெற்கே அமைந்துள்ளது. கிரிமியாவின் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட தீபகற்பத்திற்கு தொடருந்து பாதை உள்ளது.

இது உக்ரைனிய முன்னணி நிலைகளில் இருந்து சுமார் 20 முதல் 25 கிலோமீட்டர்கள் (15 மைல்கள்) தொலைவில் உள்ளது.

ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, உக்ரைன் அப்பகுதியில் அதன் எதிர்த்தாக்குதலை அதிகரித்து, தெற்கு முனையில் கூடுதல் துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts