ரஷ்ய தாக்குதலில் அமெரிக்க ஆயுதங்கள்! குழப்பத்தில் உக்ரைன்

உக்ரைன் ரஷ்ய எல்லைக்கருகில் அமைந்துள்ள ரஷ்ய நகரமான Belgorod மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் விடயம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது குற்றஞ்சாட்டியுள்ளதுடன் உக்ரைன் புடினுக்கு எதிரான ரஷ்ய குழுக்கள்தான் அந்த தாக்குதலுக்கு காரணம் என்று கூறியுள்ளது.

இதற்கிடையில் அந்த தாக்குதலில் அமெரிக்க தயாரிப்பான வாகனங்களும் பங்கேற்றதற்கு அடையாளமாக, அந்த வாகனங்கள் விழுந்து கிடப்பதைக் காட்டும் புகைப்படங்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

இதேவேளை தாங்கள் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்துவதை ஊக்குவிப்பதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்ய தாக்குதலில் அமெரிக்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் விடயத்தின் உண்மைத்தன்மையில் சந்தேகம் இருப்பதாக அமெரிக்கா கருதுவதாக அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போரை எப்படி நடத்துவது என்பதை தீர்மானிப்பது உக்ரைனுடைய கையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Posts