ரஷ்ய தலைநகரில் அடுத்தடுத்து தீவிரமடையும் தாக்குதல்!

ரஷ்யாவின் தலைநகரான் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்றில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொஸ்க்வா சிட்டி கொம்பிளக்ஸ் கட்டடம் நேற்று மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் மேயர் சேர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

எனினும் உக்ரைனின் பல ட்ரோன்களை ரஷ்ய படையினர் சுட்டுவீழத்தியுள்ளதாகவும், ஒரு ட்ரோன் மேற்படி கட்டடத்தை தாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நேற்றுமுன்தினம் நடந்த தாக்குதலின் பின்னர், யுத்தமானது ரஷ்யா பிராந்தியத்துக்கு திரும்பும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

இதேவேளை, உக்ரைனின் கிறைவ்யி றிஹ் நகரில் ரஷ்யா நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 10 வயது சிறுமி உட்பட அறுவர் பலியானதுடன் மேலும் 75 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts