ரஷ்ய ஜனாதிபதி புடினின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளாரா??

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்ற ஊகத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மறுத்துள்ளார்.

பிரெஞ்சு தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், ரஷ்ய தலைவர் ஒவ்வொரு நாளும் பொதுவில் தோன்றுகிறார்.

அத்துடன் எந்த ஒரு நல்ல மனிதனும் நோயால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 70 வயதாகும் புடின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை அடுத்து, ஒருவேளை அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.

உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தின் “விடுதலை” ரஷ்யாவின் முன்னுரிமை திட்டமாகும் என்று செர்ஜி லாவ்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts