வாக்னர் கூலிப்படைத்தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்ய இராணுவ தலைவர்களை கடத்த திட்டமிட்டிருந்ததாக இரகசிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
இந்த இரகசிய சதித்திட்டத்தை பாதுகாப்புப்படையினர் முடக்கிவிட்டார்கள் எனவும், இதனால் திட்டமிட்டிருந்த கிளர்ச்சியை முன்னெடுக்கும் நிலைக்கு யெவ்ஜெனி பிரிகோஜின் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
வாக்னர் கூலிப்படையின் தலைவர் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் இராணுவத் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோரை தெற்கில் திட்டமிட்ட பயணத்தின் போது கடத்த திட்டமிட்டிருந்தமையும் தற்போது தெரியவந்துள்ளது.
இவரது திட்டத்தை இரு தினங்களுக்கு முன்னரே ரஷ்ய நிர்வாகம் உறுதி செய்த நிலையில், பதிலுக்கு Rostov நகரை வாக்னர் கூலிப்படை கைப்பற்றியுள்ளது.
இந்த திட்டத்தின் பின்னணியில் மூத்த இராணுவ அதிகாரிகளின் உதவி இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
இந்த நிலையில் தான் தளபதி Armageddon என அறியப்படும் Sergei Surovikin வாக்னர் கூலிப்படைக்கு உதவியிருக்கலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது.