ரஷ்ய அதிபர் புடினை பார்க்க கண்ணீர் விட்டு கதறியழுத சிறுமி!

ரஷ்ய அதிபர் புடினை காண முடியாமல் கதறியழுத சிறுமியை, அதிபர் மாளிகைக்கு வரவழைத்து புடின் விருந்தளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள (Dagestan) தாகெஸ்தான் குடியரசுக்கு அதிபர் புடின் சுற்றுப்பயணம் சென்ற போது, அவரை பார்க்க 8 வயது சிறுமி (Raisat Akipova) ரைசாட் அகிபோவா வருகை தந்துள்ளார்.

இருப்பினும், கடும் கூட்ட நெரிசலில் புடினை சந்திக்க முடியாமல் போனமையினால் கண்ணீர் விட்டு கதறி அழுந்துள்ளார்.

இந்த விடயம் புடினின் காதுகளுக்கு சென்ற நிலையில் உடனடியாக சிறுமியை அதிபர் மாளிகையான க்ரெம்ளினுக்கு நேரில் வரவழைத்து விருந்தளித்துள்ளார்.

இதன்போது புன்னகையுடன் புதினைக் கண்டு ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்ட சிறுமியின் கன்னத்தில் பாசத்துடன் முத்தமிட்டு பூங்கொத்து கொடுத்து புடின் வரவேற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியின் கைகளைப் பிடித்து தன் இருக்கைக்கு அழைத்துச் சென்று தனது இருக்கையில் அமர வைத்துள்ளார்.

Related Posts