ரஷ்யா மீது கை வைத்தால் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் – எச்சரிக்கும் முன்னாள் சுவில் தூதர்

ரஷ்யா மீது கைவைத்தால், பின் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதை பாரபட்சமில்லாமல் விமர்சிக்கும் முன்னாள் சுவிஸ் தூதரான Yves Rossier உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் மீதும் தவறு இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

ரஷ்யாவை காயப்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்கான பின்விளைவுகளை சந்திக்கவும் தயாராக இருக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குப் போகும் பணத்தை நீங்கள் தடுத்து நிறுத்த விரும்பினால், உங்களுக்கு முழுமையாக எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கல் நிறுத்தப்படும்.

தடைகள் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை மாற்றியதாக சரித்திரமே கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் 2014இல் நடைபெற்ற Maidan protests என்னும் மக்கள் போராட்டத்தின் போது உக்ரைன் எடுத்த முடிவு, Minsk ஒப்பந்தத்தை மீறியது என உக்ரைன் தரப்பிலும் தவறுகள் உள்ளன என்று Rossier குறிப்பிட்டுள்ள.

எனினும், ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதை இவற்றைக்கொண்டெல்லாம் நியாயப்படுத்த முடியாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் வெளிச்சத்தில் பிரிட்டனின் ஆயுதப் படைகளின் அளவு அதிகரிக்கக்கூடும் என்று பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

பிளாட்ஃபார்ம்களில் மக்கள் எவ்வளவு இணைந்திருக்கிறார்கள் என்பது மிகவும் சுவாரஸ்யமானது. மின்னணுப் போர் மற்றும் வான் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக முதலீடு தேவை என்று உக்ரைனில் நடந்த போரிலிருந்து பாடங்கள் கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்,

Related Posts