ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதித்தது அமெரிக்கா!

உக்ரைன் மீதான படையெடுப்பை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இதன்படி, உலோக நிறுவனமான MMK மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய தொடர்புடையது என அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

அமெரிக்க திறைசேரி இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றும் புட்டினுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா ஆகியோருக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அலினா கபேவா , தொலைக்காட்சி, வானொலி மற்றும் அச்சு அமைப்புகளின் கிரெம்ளின் சார்பு குழுவான தேசிய ஊடகக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.

MMK ரஷ்யாவின் மிகப்பெரிய வரிசெலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதுடன், ரஷ்ய அரசாங்கத்திற்கு கணிசமான வருவாயை வழங்குகிறது என்று அமெரிக்க திறைசேரி குறிப்பிட்டுள்ளது

வாஷிங்டன் அதன் துணை நிறுவனங்களான ரஷ்யாவை தளமாகக் கொண்ட Investitsionnaya Kompaniya MMK-FINANS மற்றும் துருக்கியை தளமாகக் கொண்ட MMK Metalurji Sanayi Ticaret Ve Liman Isletmeciligi Anonim Sirketi ஆகியவற்றிக்கும் தடைகளை விதித்துள்ளது.

Related Posts