ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறும் வரை உக்ரைனில் அமைதி சாத்தியமில்லை, ஆனால் மாஸ்கோ அவ்வாறு செய்யத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கும் போதே பொரெல் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,ரஷ்யா தனது படைகளை திரும்ப பெறத் தயாராக இல்லை என்று நான் பயப்படுகிறேன். அது திரும்பப் பெறாத வரையில், அமைதி சாத்தியமாகாது.
அமைதியை சாத்தியமாக்குவது ரஷ்யா தான், நிலையான அமைதியை விரும்பினால் ஆக்கிரமிப்பாளர்கள் பின்வாங்க வேண்டும்.”என்று கூறியுள்ளார்.