ரஷ்யாவை தாக்க திட்டமிடவில்லை! அமெரிக்கா தெரிவிப்பு

போலந்து விஜயத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுவது போல் ரஷ்யாவை தாக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிடவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

எனவே ரஷ்ய அதிபரின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை தாக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் கூறிய கருத்திற்கு அமெரிக்க அதிபர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அண்டை நாடுகளுடன் நிம்மதியாக வாழ விரும்பும் லட்சக்கணக்கான ரஷ்யர்கள் எதிரிகள் அல்ல என்று போலந்தின் வார்சாவில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வலியுறுத்தினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனில் போரை ஆரம்பித்து நாளையுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.இவ்வாறானதொரு பின்னணியில் தான் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் சர்ச்சைக்குரிய சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் உக்ரைன் விஜயம் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக சர்வதேச விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts