ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம் நடைமுறை

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம் நடைமுறைப்படுத்துவதாக புடின் தெரிவித்துள்ளார்.

சிறப்பு இராணுவ நடவடிக்கை என கூறி உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 8 மாதங்கள் ஆகின்றது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கின்றது.

இந்த போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட அந்த 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் இராணுவம் கடுமையாக போராடி வருகின்றது.

இந்த நிலையில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களிலும் ரஷ்ய அதிபர் புடின் இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இராணுவ சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து புதின் குறிப்பிடவில்லை. அதே சமயம் இந்த உத்தரவு இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

Related Posts