ரஷ்யாவுக்கு உதவ திட்டமிட்டுள்ள பெரிய நாடு: மோசமான விளைவுகள் ஏற்படலாமென எச்சரிக்கை

உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா ரஷ்யாவுக்கு உதவலாம் என வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளிக்க சீனா திட்டமிட்டு வருவதாகவும், உதவும் பட்சத்தில் மோசமான விளைவுகளை உருவாக்கும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க மாகாணங்கள் செயலரான Antony Blinken ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் சீனா, ஆயுதங்கள் வழங்குதல் உட்பட பல்வேறு வகையான உதவிகளை ரஷ்யாவுக்கு வழங்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், ரஷ்யப் படைகள் கொலை, சித்திரவதை, வன்புணர்வு மற்றும் நாடுகடத்தல் ஆகிய கொடூரமான செயல்களில் ஈடுபட்டுவருவதாக ரஷ்யா மீது குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர், அமெரிக்கா ரஷ்யாவை மோசமானதாக காட்ட முயல்வதற்காகவும் விமர்சித்துள்ளது.

Related Posts