ரஷ்யாவில் தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்!!

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் சக்தி வாய்ந்த போர் விமானமொன்று தீக்கிரையானதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தெற்கே Soltsy-2 இராணுவ விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த Tupolev Tu-22 போர் விமானமே இவ்வாறு தீக்கிரையானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tu-22 போர் விமானமானது ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது மற்றும் உக்ரைனில் உள்ள நகரங்களை தாக்க ரஷ்யாவால் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய நேரப்படி சனிக்கிழமை பகல் 10 மணியளவில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான விபத்தில் தீவிரவாத செயலால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Soltsy-2 இராணுவ விமான தளமானது உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 400 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.

மேலும், Tu-22 போர் விமானமானது சிரியா, செச்சினியா, ஜார்ஜியா மற்றும் மிக சமீபத்தில் உக்ரைனுக்கு எதிராகவும் ரஷ்யாவினால் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts