உக்ரைனை தாக்கி அழிக்கும் அளவிற்கு ரஷ்யாவில் கிளஸ்டர் குண்டுகள் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சியொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளை ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக பயன்படுத்தினால், ரஷ்யாவுக்கு சொந்தமான கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்த ரஷ்யாவுக்கு உரிமை உண்டு எனவும் புடின் தெரிவித்துள்ளார்.
மேலும், கிளஸ்டர் குண்டுகளை இங்கிலாந்து உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடம் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ளார்.
கிளஸ்டர் குண்டுகள் எங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால், பரஸ்பர நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது” என்றும் புடின் பேட்டியில் கூறியுள்ளார்.