ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் 30 ஆயிரம் பேரை கொன்று குவித்த உக்ரைன்!!

உக்ரைன் போரில் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பு பகுதிகளை இலக்காக கொண்டு அடுக்கடுக்காக ஏவுகணைகளை ரஷ்யா வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில், கீவ் நகரில் இருந்து 274 கி.மீ. தொலைவில் உள்ள மெல்னைட்ஸ்கி நகரில் நேற்று காலை இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

பாக்முத் பகுதியில் போரில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஷ்யா, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க முற்படுகின்றன என குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கமைய, கடந்த சில நாட்களுக்கு முன்னர் போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

எனினும், ரஷ்யாவின் கூலிப்படை நிறுவனம் என கூறப்படும் வாக்னர் குழுவை சேர்ந்த 30 ஆயிரம் பேர் போரில் மரணமடைந்துள்ளனர்.

டிசம்பரில் இருந்து உக்ரைனில் போரில் உயிரிழந்த வாக்னர் வீரர்களில் 90 சதவீதம் பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நபர்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related Posts