ரஷ்யாவின் மற்றுமொரு தாக்குதல்! உக்ரைனில் காற்றில் கலக்கும் விஷ வாயு!!

உக்ரைனில் உலகின் மிகப்பெரிய அம்மோனியா குழாய் வெடித்து விஷ வாயு காற்றில் கலப்பதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் அமைந்துள்ள Masiutovka கிராமத்தில் செல்லும் குழாய் வெடித்து அப்பகுதி எங்கும் மேக மூட்டமாக வாயு காற்றில் கலப்பது காணொளி ஒன்றில் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல் காரணமாக குறித்த குழாய் வெடிப்பு நேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

ரஷ்யாவின் Togliatti பகுதியில் இருந்து 1,534 மைல்கள் அளவுக்கு இந்த அம்மோனியா குழாய் விரிவடைந்து காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி வோல்கா நதி ஊடாக மூன்று கருங்கடல் துறைமுகங்களையும் இணைக்கிறது.

தெற்கு உக்ரைனில் டினீப்பர் நதியில் அமைந்துள்ள நோவா ககோவ்கா அணையை சேதப்படுத்திய விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்போதும் அம்மோனியா குழாய் வெடித்த விவகாரத்திலும் இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Related Posts