உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகளை தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள மக்கள் தண்ணீருக்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேயர் விட்டலி கிளிட்ச்கோவின் கருத்து தெரிவித்ததாவது,
“கிவ் நகரில் 40% நுகர்வோர் தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும், 270,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிவ் தலைநகரில் 80% மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நகர் முழுவதும் நீண்ட வரிசைகளில் பம்புகளில் இருந்து தண்ணீரை சேகரிக்க மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் இராணுவக் கட்டுப்பாடு மற்றும் எரிசக்தி அமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அனைத்து இலக்குகளும் தாக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆனால் ஏவப்பட்ட 55 ஏவுகணைகளில் 45 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்துள்ளன.
ரஷ்ய ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைனின் 30 வீத மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி Volodymyr Zelensky குறிப்பிட்டுள்ளார்.