கரவெட்டியிலும் வேலணையிலும் ஆதரவு தந்திருந்தால், நெடுந்தீவினை விட்டுக்கொடுத்திருப்போம் – என்.ஸ்ரீகாந்தா

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரிடம் பேரம் பேசியதாக கூறியமைக்கு ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள் என என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் குறித்த விடயம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எம்முடன் பேசியதற்கான ஆதாரம் இருப்பதாக ஈ.பி.டி.பி.யினர் கூறியிருக்கின்றார்கள். அவ்வாறு ஆதாரம் இருக்குமானால் வௌியிடுங்கள்.

கூட்டாட்சி அல்லது தனி சபைகள் என பேரம் பேசியிருந்தால் அதற்கான ஆதாரங்களை வெளியிடுங்கள். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை பறிபோன விரக்தியில் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் யாழ். மாநகர சபை உள்ளிட்ட பல உள்ளளூராட்சி சபைகளில் ஆதரவு வழங்கியிருந்தார்கள். அதுபோன்று கரவெட்டியிலும் வேலணையிலும் ஆதரவு தந்திருந்தால், நெடுந்தீவினை விட்டுக்கொடுத்திருப்போம்” எனத் தெரிவித்தார்.

Related Posts