ரவிராஜை கொல்ல 5 கோடி ரூபா! கருணா குழுவுக்கு வழங்கினராம் கோட்டா!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை கொல்ல கோட்டாபய ராஜபக்‌ஷவால் 5 கோடி ரூபா கருணா குழுவுக்குக் கூலியாக வழங்கப்பட்டதாக புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி லியனாச்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டார்.

இந்த கொலை கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் வசந்த ஊடாக கருணா தரப்பிற்கு பணம் வழங்கப்பட்டது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க, அரச புலனாய்வுப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டுல், கருணா தரப்பின் வருண் ஆகியோருக்கு தெரிந்தே கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டது.

ரவிராஜை கொலை செய்யப் போகிறார் என வருண் என்னிடம் கூறினார் அரச புலனாய்வு தகவல் பிரிவுக்கு சொந்தமான பச்சை நிற முச்சக்கர வண்டியொன்றில் பிரசாத், விஜிர, செனவி, அஜித் போன்றவர்கள் இருந்தார்கள். வஜிரவின் கையில் கறுப்புநிற பை ஒன்று இருந்தது.

இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னர் ரவிராஜ் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் மீளவும் தேசிய நூதன சாலைக்கு அருகாமையில் வருணை சந்தித்தேன். ரவிராஜ் கொலைக்காக கோட்டா 5 கோடி வழங்கினார் என அவர் என்னிடம் கூறினார் என லியனாரச்சி அபேரட்ண நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணைகள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளன.

Related Posts