ரவிகரனை ரி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு வருமாறு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு பொலிசார் ஊடாக இந்த அழைப்பாணையை கடந்த புதன்கிழமை பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் விடுத்துள்ளனர் என மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

அந்த அழைப்பாணையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரின் அலுவலகத்திற்கு வருமாறு கூறப்பட்டுள்ளது.

எனினும் விசாரணைக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் ரவிகரன் தெரிவித்தார்.

இதேவேளை, ரவிகரனின் வீட்டில் இராணுவத் தளபாடங்கள் உள்ளன என்று கூறி கடந்த 5 ஆம் திகதி வீட்டைச் சோதனையிட முற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts