ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டே குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பொன்னகரை சேர்ந்த தவமன்றன் பாலசூரியர் என்ற 43 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து குறித்த நபரின் சடலம் ரயிலில் ஏற்றி செல்லப்பட்டு மாங்குளம் ரயில் நிலைத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Posts