ரயில் சாரதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆரம்பித்துள்ள திடீர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்றும் (12) தொடரும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை ரயில் சாரதிகள் போதியளவு வருகை தராவிடின் ரயில் சேவையை நடாத்த முடியாமல் போகும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
நேற்று மாலை ரயில்வே சாரதிகள், அரசாங்க அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்து நேற்றிரவு 7.30 மணிக்கு திடீரென பணிப்பகிஷ்கரிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.