ரயில் சேவை இன்று முதல் நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது!

கொழும்பு – காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.

நாவற்குழியில் உள்ள ரயில் பாலத்தில் உள்ள திருத்த பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, 5 நாட்கள், வரை இடைநிறுத்தப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த தினங்களில் ரயில் முற்பதிவு செய்த பயணிகள் சிறப்பு பஸ் மூலமாக நாவற்குழி ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என யாழ். ரயில் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நாவற்குழி வரை மாத்திரமே ரயில் சேவை இடம்பெறும் என ரயில் சேவை கண்காணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தள்ளார்.

Related Posts