ரயில் கடவை கேட்டினை பூட்டாது தூக்கத்தில் இருந்த கடவை காப்பாளர்!

இன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோகிதத்தால் தடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி காலை 6.10 மணிக்கு புறப்பட்ட உத்தரதேவி (புதிய ரயில்) கச்சேரி ரயில் கடவையை அண்மித்த வேளை கடவை காப்பாளர் கேட்டினை பூட்டாது தூக்கத்தில் இருந்துள்ளார். ரயில் சாரதி திடீரன ரயிலின் வேகத்தை குறைத்து திடீரென கடவை கதவுக்கு அண்மையில் ரயிலினை நிறுத்தினார் வாகனங்கள் சென்று 10 நிமிடங்கள் பின்னரே ரயில் சென்றது.

இது குறித்து கடவை காப்பாளரிடம் விசாரணை இடம்பெற்றது.

Related Posts