நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே சங்கமும் எதிர்வரும் 01 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணியை தனியாருக்கு வழங்க காணி வங்கியொன்று அமைத்தல், முறையற்ற முறையில் ரயில்வே துறையில் நியமனம் வழங்கல், ரயில்வே திணைக்களத்துக்கு அதிகாரியொருவரை நியமிக்கும் அரசாங்கத்தின் திட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அரச ஊழியர்களின் ஓய்வுதிய உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொள்ளுதல் போன்ற விடயங்களை முன்னிருத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில் சேவை தொழில் சங்க ஏற்பாட்டாளர் டபிள்யு.எம். ஜானக பிரணாந்து தெரிவித்துள்ளார்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் 50 தொழிற்சங்கங்கள் பங்குபற்ற தயாராகவுள்ளதாகவும் , இந்த கோரிக்கைகளுக்கு போக்குவரத்து அமைச்சர் நியாயமான தீர்வைப் பெற்றுத்தர முன்வராது போனால் குறித்த தினத்தில் வேலைநிறுத்தம் இடம்பெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பஸ் சங்கங்களும் தண்டப் பண யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் டிசம்பர் 01 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.