ரயில்களில் பிச்சை எடுத்து 3 வீடுகள் கட்டிய 65 வயதுடைய கண்தெரியாத முதியவர்!!!

25 வருடங்களாக ரயில்களில் பிச்சை எடுத்து 3 வீடுகள் கட்டிய ஹம்காவை வசிப்பிடமாக கொண்ட 65 வயதுடைய கண்தெரியாத முதியவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்படும் போது வங்கி கணக்கில் 5 இலட்சம் ரூபாவும் வைத்திருந்துள்ளார். ஹம்பகா- கொழும்பு கேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிக்கும் ரயில் பயணிகளிடம் பணத்தினை சேகரித்துள்ளார்.

இவர் மூன்று வீடுகளை கட்டியதில் இரண்டு வீடுகளை தனது இரு மகளுக்கு சீதனமாக கொடுத்துள்ளார். மற்றைய வீட்டினை வாடகைக்கும் விடுவதற்கு திட்டமாக இருந்துள்ளார்.

ஒரு நாளைக்கு 4 ஆயிரம் ரூபாவினை ரயில் பயணிகளிடம் இருந்து பிச்சையாக சேகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts