ரயிலில் டிக்கெட் இன்றி பயணிப்பவர்களுக்கான அபராதம் உயர்வு

ரயிலில் பிரவேசச் சீட்டின்றி (டிக்கட்) பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது 1500 ரூபாவாக இருந்த அதிகபட்ச அபராதத் தொகை 3000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related Posts