ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 35க்கும் அதிகமானவர்கள் பலி

ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 35க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் சிறுவர்கள் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டல் அஸ் சுல்தான் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேல் காசா நகரம் உட்பட வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் காசாவின் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை மேற்கொண்டதை உறுதி செய்துள்ளதுடன் ஹமாஸ் உறுப்பினர்களை துல்லியயமாக தாக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி இலக்குவைத்ததாக தெரிவித்துள்ளது.

Related Posts