ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை!

நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்திற்குள் அண்மைய காலமாக இடம்பெற்று வந்த உட்பூசல் தீவிரமடைந்து வந்த நிலையில், நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

எனினும், அரசியலமைப்பின் பிரகாரம் தானே தொடர்ந்தும் நாட்டின் பிரதமர் எனக் குறிப்பிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுமாறு கூறியுள்ளார்.

நேற்றிரவு மற்றும் இன்று காலை ஐக்கிய தேசிய முன்னணியினருடன் சந்திப்புக்களை ரணில் நடத்தியிருந்த நிலையில், அவரது அடுத்த அறிவிப்பு தொடர்பாக எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.

Related Posts