ரணில் மீண்டும் பதவியேற்றால் அதிகாரத்தில் இருக்கப்போவதில்லை: மைத்திரி சூளுரை

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குரிய காரணத்தையும் அவை தொடர்பாக ஜனாதிபதி என்ற வகையில் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

மேலும், புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் புதிய அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

குறித்த தகவல்கள் சிங்கள ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts