பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் அலரிமாளிகையில் நேற்று புதன்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
பரவிப்பாஞ்சானிலுள்ள இராணுவ முகாமுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் அத்துமீறி நுழைந்தார் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மேற்படி சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.
“பரவிப்பாஞ்சான் பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சென்றமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை மற்றும் மீள்குடியேற்ற பிரச்சினைகள் பற்றி இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டது.
குறித்த பகுதி, மக்களுக்குச் சொந்தமானது. அவர்களின் வீடுகளும் காணப்படுகின்றன. எனவே, எஞ்சியுள்ள 54 குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பரவிப்பாஞ்சான் பகுதியிலுள்ள நிலம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக முழுமையானதொரு அறிக்கையை பிரதமர் இராணுவத்தினரிடம் கோரியுள்ளார். அத்துடன், எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக பொலிஸ் விசாரணையும் இன்னும் இடம்பெறவில்லை” – என்றார்.