ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிட அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் கட்சியினால் கடந்த வெள்ளிக்கிழமை முன்மொழியப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் விடயங்களை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட 20 பேர் கொண்ட குழுவுடனான சந்திப்பின்போதே இது குறித்து தீர்மானிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது பிரதித் தலைவர் சஜித் பிரேமாதாஸ, “ரணில் விக்கிரமசிங்கவால் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தை எட்ட முடியுமா?” என கேள்வியெழுப்பினார். ரணில் விக்கிரமசிங்க இதற்கு இணங்கியதைத் தொடர்ந்து கட்சி ரணிலை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சஜித் உத்தரவிட்டார்.
அத்துடன் “ரணில் விக்கிரமசிங்க, மஹிந்தவை எதிர்த்துப் போட்டியிடுவார் என்பது உறுதியாகி விட்டதால், எமது வாக்காளர்களை ஊக்த்தில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அரசாங்கம் தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரே அதன் வேட்பாளர் என்பது மக்களுக்கு தெரியவேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க போன்றவர்கள் ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டை அவதானித்த பின்னர் இது குறித்து தீர்மானிக்கலாம் என தெரிவித்தனர்.