ரஜினி 2.0 படத்தில் வடிவேலு நடிக்கிறார்!

முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு விஷால் நடிப்பில் வெளியான ‛கத்தி சண்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது வடிவேலு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ‛கத்தி சண்டை படத்தில் மருத்துவராக நடித்த வடிவேலுவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தில் வடிவேலு காமெடி நடிகராக ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதவிர இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2, சிவலிங்கா, விஜய் 61 ஆகிய படங்களிலும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி மற்றும் வடிவேலு இருவரும் கடைசியாக குசேலன் படத்தில் நடித்தனர். இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் வடிவேலு இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Posts