ரஜினி-விஜய்-சூர்யாவினால் பின்வாங்கிய ஹீரோக்கள்!

இப்போதெல்லாம் படமெடுப்பதைவிட படங்களை சரியான நேரத்தில் சரியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதே தயாரிப்பாளர்களுக்கு பெரிய போராட்டமாக உள்ளது.

அதிலும், முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீசாகிறது என்றால் அவர்களுக்குத்தான் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்கிறது. இரண்டாம், மூன்றாம் தட்டு ஹீரோக்களின் படங்களுக்கு அந்த தியேட்டர்கள் கிடைப்பதில்லை. அதன்காரணமாக மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே மற்ற நடிகர்களின் படங்கள் பின்வாங்கி விடுகின்றன.

அந்த வகையில், சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா, ஜீவாவின் திருநாள், விஜயசேதுபதியின் இறைவி ஆகிய படங்கள் திரைக்கு வரத்தயாராகி விட்டன. ஆனால் ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த படங்கள் இப்போது மே மாதம் 27-ந்தேதிக்கு சென்று விட்டன.

காரணம், ஏப்ரல், மே மாதங்களில் ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி மற்றும் சூர்யாவின் 24 ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன. இதனால் அவர்களுக்கு அதிக பட்ச தியேட்டர்கள் கிடைத்து விடும் என்பதால், சிம்பு, ஜீவா, விஜயசேதுபதியின் படங்களை ரிஸ்க் எடுக்க விரும்பாமல் மே மாதம் இறுதியில் வெளியிட அப்படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

Related Posts