ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் கபாலி இசைவெளியீட்டு விழா

ஜூலை 1ஆம் தேதி ‘கபாலி’ உலகமெங்கும் வெளியாகும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கபாலி படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகின்றன என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், கபாலி ஆடியோ வெளியீடு பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவே அறிவித்திருக்கிறார். அவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

அந்த வீடியோவில் என்ன பேசி இருக்கிறார் தாணு?

”கபாலி படத்தின் ஆடியோ விழாவை ஜூன் 15ஆம் தேதிக்குள் முடித்துவிட வேண்டுமென்ற தாக்கம் இருக்கிறது. அதை நோக்கியே தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் ஜூன் 10க்கும் கண்டிப்பாக அந்த விழா, எல்லோரும் சந்தோஷப்படும் அளவுக்கு பெரிய விழாவாக நடைபெறும்!” என்று கூறியிருக்கிறார்.

அவர் சொல்லாத விஷயமும் இருக்கிறது. கபாலி படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் பெருமளவில் ரஜினி ரசிகர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் தாணு. அதற்காக ஒய்.எம்சி.ஏ. மைதானம் போல் மிகப்பெரிய இடத்தில் கபாலி இசை வெளியீட்டை நடத்த இருக்கிறார்.

Related Posts