ரஜினி ரசிகர்கள் ஏற்படுத்தும் பரபரப்பு!

தமிழகத்தில் மாணவர் போராட்டம் வெடித்ததில் இருந்து அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக இரண்டாக உடைந்ததை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்ச ராகியுள்ளார்.

அதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கொடிபிடித்து வருகின்றனர். இப்படிப் பட்ட பரபரப்பான சூழ்நிலையில், அரசியல் நிலவரம் குறித்து இதுவரை ரஜினிதரப்பில் இருந்து எந்தவித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை. தனது முழு நேரத்தையும் 2.ஓ படத்திற்காக செலவிட்டு வருகிறார்.

ஆனால், இந்த நேரத்தில் ரஜினியின் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைப்பது போன்று சென்னையில் போஸ்டர்களை ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ளனர்.

இதற்கு முன்பு சென்னை தவிர வெளி மாவட்டங்களில்தான் அந்த மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் இப்போது சென்னையிலேயே ஒட்டி விட்டனர்.

நெக்ஸ்ட் நீங்க சிஎம் ஆனா பெஸ்ட் -என்ற வாசகத்து டன் பாட்ஷா ரஜினி பாணியில் அவர் நடந்து வருவது போன்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

ஆனால் இப்போதும் ரஜினி தரப்பில் இருந்து எந்தவித ரியாக்ச னும் இல்லை. வழக்கம்போல் அமைதி காத்து வருகிறார்.

Related Posts