ரஜினி போன்று ஸ்டைல் காட்டும் ஜி.வி.பிரகாஷ்குமார்!

டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களின் வெற்றி காரணமாக தற்போது புருஸ்லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா-2, கெட்ட பையன்டா இந்த கார்த்திக் உள்பட 3 படங்களில் கமிட்டாகியிருக்கிறார். ஆக, விஜயசேதுபதிக்கு அடுத்தபடியாக அதிக படங்களை வைத்திருக்கும் ஹீரோவாகியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

GV-piragash

இந்த நிலையில், தற்போது எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. பாட்ஷா படத்தில் ரஜினி பேசி நடித்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற வசனமே டைட்டீலாகியிருப்பதினால் பல காட்சிகளில் ரஜினி போன்று ஸ்டைல் காட்டி நடித்திருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்.

அந்த காட்சிகளில் நடிப்பதற்கு முன்பே பலமுறை ரிகர்சல் பார்த்து விட்டு வந்து நடித்தாராம். அதோடு, பாட்ஷாவில் ரஜினி சண்டை காட்சியில் காட்டிய ஆவேசத்தை தானும் வெளிப்படுத்தி நடித்திருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ். அதனால் இந்த படம் அவருக்கு நல்லதொரு ஆக்சன் படமாக அமையும் என்கிறார்கள்.

Related Posts